ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் மர்மச் சாவு- தொடரும் பதற்றம்..!!

Maharashtra Death
Maharashtra Suicide

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் மர்மமான முறையில் இறந்துபோன சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மஹாராஷ்டிராவிலுள்ள சாங்லி மாவட்டத்தில் மிராஜ் தாலுகா மஹைசல் என்கிற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் இறந்துகிடந்துள்ளனர். இதுதொடர்பாக உடனடியாக காவல்துறைக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் வீட்டில் 6 சடலங்களும், அதற்கு அருகேவுள்ள மற்றொரு வீட்டில் 3 சடலங்களையும் கைப்பற்றினர். முதற்கட்ட விசாரணையில் இவர்கள் அனைவரும் விஷமருந்தி இறந்துபோனது தெரியவந்துள்ளது.

அதனால் இது தற்கொலையாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எனினும் உடற்கூராய்வுக்கு பிறகு இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து முழு விபரம் தெரியவரும் என எதிர்பார்க்கபடுகிறது.

https://twitter.com/sirajnoorani/status/1538832325001084928

இந்நிலையில் இறந்துபோனவர்கள் குறித்த விபரங்களை சாங்லி மாவட்ட காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி, போபட் யாலப்பா வான்மோர் (வயது 52), சங்கீதா போபட் வான்மோர் (48), அர்ச்சனா போபட் வான்மோர் (30), சுபம் போபட் வான்மோர் (28), மாணிக் யல்லப்பா வான்மோர் (49), ரேகா மாணிக் வான்மோர் (45), ஆதித்ய மாணிக் வான்மோர் ஆகியோர் அடங்குவர். (15), அனிதா மாணிக் வான்மோர் (28), அக்கதாயி வான்மோர் (72) உள்ளிட்டோர் இறந்துபோயுள்ளனர்.

Exit mobile version