மகாராஷ்டிரா கட்டிட விபத்தில் 10 பேர் பலி- பிரதமர் மோடி இரங்கல்…

மகாராஷ்டிராவில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்து பத்து பேர் ஊழிற் இழந்து உள்ளனர். அதற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள பிவண்டி பகுதியில் உள்ள படேல் காம்பவுண்டில் அமைந்துள்ள 3 மாடிக் கட்டிடம் நேற்று காலை அதிகாலை இடிந்து விழுந்தது அதில் பலரும் படுகாயம் அடைந்துள்ளனர். தில் பத்துபேர் இறந்து விட்டனர்.

இவர்களின் சடலங்கள் போலீசாரால் கெண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. சுமார் 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து முழுவீச்சில் மீட்பு பணி நடைபெறுகிறது. இந்நிலையில், கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி கூறுகையில் அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது யாதெனில் ‘மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து குறித்த செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். கட்டிடம் இடிந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவாக குணம் அடைய பிரார்த்திக்கிறேன். மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

Exit mobile version