மலப்புரத்தில் இத்தனை தங்கங்களா !!

Kozhikode: Rescue operation underway after an Air India Express flight with passengers on board en route from Dubai skidded off the runway while landing, at Karippur in Kozhikode, Friday, Aug. 7, 2020. (PTI Photo)(PTI07-08-2020_000255A)

மலப்புரம்  தங்கங்களுக்கு மிகவும் பேமஸ் ஆன இடம் என்று யாராவது கூறும் போது நாம் யாரும் அதை நம்பியது கிடையாது  ஆனால் இன்று இந்தியா  முழுவதும் அதை ஒப்புக் கொண்டு அந்த தங்கங்களை கொண்டாடி வருகிறார்கள்.
 
இரத்தம் கொடுக்க  காத்திருந்தவர்கள்

கரிப்பூர் விமான விபத்துக்கு பிந்தைய மீட்பு நடவடிக்கைகளில் அரசின் பேரிடர் குழுவினர்கள் வந்து சேருவதற்கு முன்பே அந்த பகுதியில் வசித்தவர்கள்மீட்புபணிகளில் காட்டிய வேகமும், காயமடைந்தவர்களை விரைந்து மருத்துவமனைகளில் கொண்டு சேர்த்ததால் உயிர்ச்சேதம் குறைந்தது. கொட்டி தீர்த்த பெருமழையை கூட பொருட்படுத்தாமல், கோவிட் கால தனிமைப்படுத்துதல் அனைத்தையும் புறந்தள்ளி தங்களது உடல்நலனை பற்றிய கவலைப்படாமல் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.. 

 எல்லாவற்றிற்கும் மேலாக விபத்துக்குள்ளான விமானத்தில் பயணிகளின் உடமைகள் அந்த பகுதி முழுவதும் சிதறி கிடந்த பிறகும், அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் துளிகூட வராமல் மீட்புபணிகளை மட்டுமே செய்த நல்ல உள்ளங்கள். பல மாதங்களாக  கொரோனா  பயத்தில் வீடுகளிலேயே இருந்தவர்கள்  விபத்து என்று கேள்விப்பட்டதும்  முதல் ஆளாக வந்து நின்றார்கள்

 ஆண்கள் மற்றும் பெண்கள் தன்னார்வலர்களுடன் மருத்துவமனை ரத்த வங்கிகளுக்கு முன்னால் நீண்ட கியூ, காயமடைந்த பயணிகளுக்கு தங்கள் இரத்தத்தை கொடுக்க காத்திருப்பது, அது நள்ளிரவு கடந்துவிட்டது என்பதையும், அவர்களது குழந்தைகள் வீட்டில் தனியாக இருப்பதையும் அவர்கள் ஒரு நிமிடம் கூட நினைத்துப் பார்க்க வில்லை.இன்னும் சிலர்காயமடைந்த பயணிகளை தங்கள் கார்களில் அழைத்துச் சென்றபோது, ​​தங்கள் கார்களின் இருக்கை கவர்கள் இரத்தம் மற்றும் மண்ணால் கறைபடுவதைப் பற்றி கூட கவலைப்படவில்லை 

தங்கள் வாகனங்களில் அதிவேகமாக மருத்துவமனைக்கு விரைந்து, தங்கள் உயிரைப் பணயம் வைத்து பயணித்தபோது யாரை நாம் காப்பாற்றுகிறோம் என்ற எண்ணம் அவர்களிடத்தில் எழுதவில்லை அவர் யார்பெயர், மதம் அல்லது தேசியம் அவர்களுக்குத் தெரியாது.

போலீசார் வருகைக்காக  மற்றும்காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் வந்து அழைத்துச்செல்லும் என்றோ அவர்கள் காத்திருக்கவில்லை. உள்ளூர்வாசிகள் விரைந்து வந்து காயமடைந்த பெரும்பாலான பயணிகளை அருகிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர்.என்ன நடந்தது என்று எதுவுமே புரியாத பிஞ்சு குழந்தைகள், அவர்களின் கைகளை பிடித்து, அவர்கள் பேசக்கூடிய எந்த மொழிகளிலும் ஆறுதல் கூறி அரவணைத்து இருந்தார்கள்

மற்றும் குழந்தையின் படங்களுடன் வாட்ஸ்அப் மற்றும் பெற்றோர் தொடர்பு கொள்ளும் வரை, குழந்தையைப் பெற்ற நபரின் தொடர்பு எண்ணுடன் தெரிந்த அனைத்து எண்கள் மற்றும் குழுக்களுக்கு அனுப்பப்பட்டது.இவை அனைத்தையும் செய்தது கேரள  மலப்புரம்  பகுதியில் வசிக்கும்  சாதாரண பொதுமக்கள் அதன் பிறகே அவை அனைத்தும்  அர்பணிப்பு பணிக்காக சிங்கமென புறப்பட்ட  மலப்புரம் தங்கங்கள் என்று நாம் தெரிந்து கொண்டோம்.

தற்பொழுது அவர்களை இந்தியா முழுவதும் மலப்புரம் மாமனிதர்கள் என்று கொண்டாடி வருகிறார்கள்

அவர்களின் செயலை அனைத்து உலகமும் வியப்பில் பார்த்துக்கொண்டிருக்கையில் இந்தியன் என்ற வகையில் நாம் அதில் மிகவும் பெருமிதம் கொண்டிருக்கிறோம்   மீண்டும் ஒரு முறை கடவுளின்  தேசத்தை சார்ந்தவர்கள் என்று நிரூபித்தார்கள். 

Exit mobile version