மீதமுள்ள 3 கட்ட தேர்தலையும் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் : மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

கொரோனா பரவல் காரணமாக மேற்கு வங்கத்தில் மீதமுள்ள 3 கட்ட தேர்தலையும் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் மம்தா பானர்ஜி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா, அசாம் போன்ற மாநிலங்களுக்கு ஏற்கனவே சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தநிலையில் மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 294 தொகுதிகள் கொண்ட மேற்குவங்கத்தில் 5 கட்டங்களாக 180 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

இந்த நிலையில் 6 கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. இதையடுத்து நேற்று உத்தர தினஜ்பூரில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது பேசிய அவர், மேற்கு வங்கத்தில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்டத்தில் கலந்துகொள்ளும் தொண்டர்கள், நிர்வாகிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

Read more – இன்று முதல் டோக்கன் முறையில் மதுவிற்பனை… மூடப்பட்ட பார்கள்..

இதன் காரணமாக கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, அடுத்து நடக்க இருக்கும் மூன்று கட்ட தேர்தல்களையும் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என இரு கைகளையும் கூப்பி வேண்டிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தொற்றினை முடிந்தவரை கட்டுப்படுத்த மேற்கு வங்க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்வதாகவும், விரைவில் அனைத்தும் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version