விவசாயிகளுக்குச் சொத்து அட்டை வழங்கும் திட்டம் …பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்….

விவசாயிகளுக்கு சொத்து அட்டை வழங்கும் திட்டம் நாளை தொடக்கம்.

நாட்டிலுள்ள விவசாயிகளின் சொத்து பற்றிய விவரங்களைக் குறிப்பிடும் வகையிலான சொத்துஅட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடிநாளை தொடங்கிக் வைக்கவுள்ளார்.

ஸ்வாமித்வா என்ற திட்டத்தில் கீழ் மத்திய அரசு விவசாயிகளுக்குச் சொத்து அட்டைகளை வழங்குவதை செயல்படுத்திவருகிறது.

இதில், விவசாயிகளின் சொத்து தொடர்பான உரிமைகள் பதிவு செய்யப்பட்டு ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு அவை அட்டை மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது.

இத்திட்டம் ஏற்கனவே உத்தரபிரதேசம், அரியானா, மஹாராஷ்டிராம், உத்தரகாண்ட் மற்றும் கர்நாடக ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்குச் சொத்து அட்டைகளை வழங்கும் திட்டத்தை மோடி தொடங்கி வைத்துள்ளார்.

இந்நிலையில் நாளை ( 11 ஆம் தேதி ) 6 மாநில விவசாயிகளுக்குச் சொத்து அட்டை வழங்கும் திட்டத்ஹ்டை  காணொலி காட்சி மூலம் தொடங்கிவைக்கவுள்ளார் பிரதமர் மோடி.

மேலும் இந்த அட்டையைப் பயன்படுத்தி, கடன் பெறுவதற்கும், வேறு பொருளாதார காரணங்களுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்  என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version