பிரதமர் மோடி இன்று உரை!

புதிய தேசிய கல்வி கொள்கை பற்றிய கருத்தரங்கு இன்று டெல்லியில் நடைபெறுகிறது பிரதமர் மோடி கலந்து கொண்டு, கருத்தரங்கில் தொடக்க உரை ஆற்றுகிறார்.

புதிய தேசிய கல்வி கொள்கை பற்றிய கருத்தரங்கு இன்று டெல்லியில் நடைபெறுகிறது. ‘புதிய கல்வி கொள்கையின் கீழ் உயர் கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்‘ என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கு நடக்கிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், பல்கலைக்கழக மானியக்குழுவும் இணைத்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.

பிரதமர் மோடி கலந்து கொண்டு, கருத்தரங்கில் தொடக்க உரை ஆற்றுகிறார். புதிய கல்வி கொள்கையின்(NEP) பல்வேறு அம்சங்கள் குறித்து தனித்தனி அமர்வுகள் இதில் நடக்கின்றன.

இந்த கருத்தரங்கில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்,மத்திய இணை மந்திரி சஞ்சய் தோட்ரே, புதிய கல்வி கொள்கை வரைவு குழுவின் தலைவர், உறுப்பினர்கள், பல்வேறு பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள்.

Exit mobile version