கேரள மாநிலம் பாலக்காட்டில் தனது 6 வயது மகனை அல்லாஹ்விற்கு தியாகம் செய்ததாக கூறி தாயே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்காடு :
கேரள மாநிலம் பாலக்காட்டில் வசித்து வரும் தம்பதியினர் சுலைமான்- ஷாஹிதா . சுலைமான் முன்பு வளைகுடாவில் பணியாற்றி விட்டு தற்போது பாலக்காட்டில் ஆட்டோ ரிக்ஷா டிரைவராக பணிபுரிகிறார். இவரது மனைவி ஷாஹிதா மதரஸாவில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும், மூன்று மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
நேற்று (பிப்.7) அதிகாலை 3 – 4 மணியளவில் பாலக்காட்டில் உள்ள 112 அவசர கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்படி வந்த அழைப்பில் பாலக்காடு புலக்காடு பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஷாஹிதா தனது 6 வயது அமீல் என்ற மகனை அல்லாஹ்விற்கு தியாகம் செய்வதற்காக கொலை செய்ததாக அவரே காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக வந்த உதவி ஆய்வாளர் ஜார்ஜ் குழு ஷாகிதாவின் வீட்டை அடைந்தபோது, ஷாஹிதா மீது இருந்த ரத்த கறை படிந்துள்ளது. போலீசார் வீட்டிற்குள் நுழைந்து தேடிய போது 6 வயது மகன் குளியலறையில் கழுத்து வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.
Read more – உத்தரகாண்ட் நிலச்சரிவு – உயிர் பிழைத்த இளைஞரின் நெகிழ்ச்சி தருணம்..
இதையடுத்து, பாலக்காடு தெற்கு காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி, ஷாகிதா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302ன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், ஷாஹிதாவின் கணவர் சுலைமான் மற்றும் இரண்டு குழந்தைகள் படுக்கையறையில் தூங்கி கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
