டென்மார்க் பிரதமரை வரவேற்ற நரேந்திர மோடி… காந்தி நினைவிடத்தில் மரியாதை!!

டென்மார்க் பிரதமர் டெல்லியில் குடியரசுத்தலைவருடன் சந்திப்பு; பிரதமர் மோடியும் உடன் இருந்தார்.

டெல்லி,
அக்டோபர் 9 முதல் 11 வரை 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் டெல்லியில் உள்ள ராஷ்டிடரபதி பவன் இல்லத்தில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.
முன்னதாக குடியரசு தலைவரின் சேனை படைகள் மூலம் பாரம்பரிய மரியாதை வழங்கி அழைத்து வரப்பட்ட டென்மார்க் பிரதமரை, இந்திய பிரதமர் மோடி குடியரசுத்தலைவர் இல்லத்தில் வரவேற்றார். பின்னர், குடியரசுத்தலைவர் உடனான சந்திப்பு என்பது நடைபெற்றது. இந்திய-டென்மார்க் இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் விதமாக இந்த பயணம் இருக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காரணம், இந்தியாவை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்கள் டென்மார்க்கிலும், 200க்கும் மேற்பட்ட டேனிஸ் நிறுவனங்கள் இந்தியாவிலும் உள்ளது. இவை தவிர நீர் மற்றும் கழிவு மேலாண்மை, கப்பல் போக்குவரத்து , கால்நடை வளர்ப்பு தொழில் நுட்பம் , அறிவியல் சார்ந்த தொழில்நுட்பம், பொருளாதாரம், காலநிலை மற்றும் சுற்றுசூழல் மாறுபாடு, சூரிய எரிசக்தி என பல்வேறு துறைகளில் இரு நாடுகளிலும் இணைந்து பணியாற்றி வரும் நிலையில் அதனை சற்று விரிவுபடுத்தும் நோக்கில் சந்திப்பு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது.

மிக முக்கியமாக, கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர ஒப்பந்தமான ‘Green Strategic Partnership’ எனப்படும் பசுமை மூலோபாய கூட்டமைப்பின் செயல்பாடு குறித்தும் விரிவாக ஆலோசிப்பார்கள் என கூறப்படுகிறது.

குடியரசுத்தலைவர் உடனான சந்திப்புக்கு பிறகு 3 நாள் பயணத்தில் இந்திய பிரதமரின் லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் பிரதமர் உடனான சந்திப்பும், அதனை தொடர்ந்து நாட்டின் திட்ட ஆலோசனை குழு மற்றும் மூத்த அரசு உயர் அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பு நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது.

Exit mobile version