ஒடிசா மாநில மக்கள் தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகளை தங்கள் வீட்டில் கொண்டாடும்படி முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநில மக்கள் தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகளை தங்கள் வீட்டில் இருந்தே கொண்டாடும்படி அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்து காணப்பட்ட நிலையில் சமீத்தில் அங்கு ஓணம் பண்டியை கொண்டாடப்பட்டதை அடுத்து கொரொனா தொற்று மேலும் மும்மடங்காக அதிகரித்துள்ளது.
அங்கு சமூக இடைவெளியைப் பின்பாற்றாததும் முககவசம் அணியாததும் தான் காரணம். எனவே ஒடிஷா மக்கள் கடந்த ஏழு மாதங்களாக பல்வேறு கஷ்டங்களையும் பொருளாதாழ இழப்புகளையும் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் வரும் தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகளை தங்கள் வீடுகளில் இருந்து கொண்டாடுங்கள்.பொதுஇடங்களில் கூட வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.