நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…மாணவர்கள் ஆர்வம்

இந்தியா முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளது.

கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கக நுழைவுத் தேர்வு இந்தியா முழுவதும் நடைபெற்றது.

இதில், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மையங்களில் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்த போதிலும் தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளுடன் கலந்து கொண்டு 13 லட்சத்து 52 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.தமிழகத்தில் 1,17,000 பேர்தேர்வு எழுதினர்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மாணவர்களுக்கு நேற்று மு தினம் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், நீர் தேர்வு முடிவுகளை இன்று தேசிய தேர்வு முகமை வெளியிடவுள்ளாது. மாணவர்கள் இந்த ரிசல்ட் அறிய nta.ac.in மற்றும் ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது

Exit mobile version