பீகாரின் முதல்வர் பதவிக்கு நான் தான் என்று உரிமை கொண்டாடவில்லை,அதை முடிவு எடுக்கும் தகுதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிக்கு தான் உள்ளது என்று நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகார்:
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிதிஷ்குமார் தலைமையியில் 125 இடங்களில் அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், பாட்னாவில் உள்ள தனது இல்லத்தில், கூட்டணி கட்சி தலைவர்களுடன் நிதிஷ்குமார் இன்று ஆலோசனை நடத்தினார்.அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதிஷ்குமார் கூறியதாவது:
பீகாரின் முதல்வர் பதவிக்கு நான் தான் என்று உரிமை கொண்டாடவில்லை,அதை முடிவு எடுக்கும் தகுதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிக்கு தான் உள்ளது என்று நிதிஷ் குமார் தெரிவித்தார்.மேலும், நாளை மறுநாள் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் எம்.எல்.ஏ.ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அதில் அனைத்து முடிவுகளும் கலந்து ஆலோசிக்க பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.