புதுச்சேரி தேர்தல் பயத்தில் பா.ஜ.க : ரங்கசாமியுடன் கூட்டணி வைக்க குட்டிக்கரணம் அடிக்கும் அமித்ஷா

புதுச்சேரி பா.ஜ.க கூட்டணியில் சேர என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டு வருகிறது.

புதுச்சேரி :

புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து என் ஆர் காங்கிரஸ் கட்சி விலகி தனியாக போட்டியிடுவதாக என்று அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி முடிவு எடுத்து இது தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளார் என்ற தகவல் வெளிவந்தது.

இந்தநிலையில், ரங்கசாமி இல்லாமல் தேர்தலை சந்தித்தால், பா.ஜ.க புதுச்சேரியில் படு தோல்வியை சந்திக்கும் என்பதை சர்வே மூலம் மேலிட பொறுப்பாளர்கள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிந்தனர். இதனால் பா.ஜ.க கூட்டணியில் சேரக்கோரி, ரங்கசாமிக்கு தொடர் அழுத்தம் கொடுத்து வருவதாகவும், இதற்கு ரங்கசாமி எந்த பதிலும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.

Read more – திமுக – சி.பி.எம் தொகுதி பங்கீடு : 6 தொகுதிகள் முடிவானதா ?

பெங்களூரை சேர்ந்த பா.ஜ.க பொறுப்பாளர்கள் ரங்கசாமி வீட்டிற்கு சென்று பேசியுள்ளனர். அப்போது அவர்கள் மத்திய அமைச்சர் அமித்ஷாக்கு வீடியோ கால் செய்து ரங்கசாமியிடம் கொடுத்தனர். அப்பொழுது பேசிய அமித்ஷா, தனி விமானம் அனுப்பி வைக்கிறேன். டெல்லி வாருங்கள். உங்கள் கோரிக்கைகளை பேசி தீர்த்து கொள்வோம் என்று கூறியதாக தெரிகிறது. இதற்கும் ரங்கசாமி எந்த வித பதிலும் தெரிவிக்கவில்லை என்றும், பாஜகவினர் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

Exit mobile version