அரசு கல்லூரி மாணவர்களுக்கு சத்தான மதிய உணவு – தெலுங்கானா அரசு

தெலுங்கானாவில் அரசு கல்லூரி மாணவர்களுக்கு சத்தான மதிய உணவு வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஏழை மாணவர்கள் கல்வி கற்பதற்காக மாநில அரசுகள் அவர்களுக்கு இலவச புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் வழங்கி வருகின்றன. மேலும், மாணவர்கள் பசியுடன் கல்வி கற்கக்கூடாது என்பதற்காகவும், ஆரோக்கியத்துடன் கல்வி பயிலவும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் இந்த சலுகை 10-ம் வகுப்பு வரையில்தான் உண்டு. இந்நிலையில் ‘‘அரசு ஜூனியர் மற்றும் பட்டப்படிப்பு (Degree) கல்லூரிகளில் படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் என்று தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

மாணவர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதற்காகவும், படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுப்பதற்காகவும் சத்தானை மதிய உணவை வழங்க முதல்வர் முடிவு செய்துள்ளார்’’ என்று தெலுங்கானா மாநில முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version