ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையில் ஒன்றரை கோடி பணம்

பீகார் செல்லும் ரயிலில் கேட்பாரற்று கிடந்த ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் கண்டெடுத்துள்ளனர்

டெல்லியில் இருந்து பீகார் செல்லும் சிறப்பு ரயிலில் கேட்பாரற்று ஒரு பை கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது அந்த பையில் கட்டுக்கட்டாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் பணம் இருந்துள்ளது. இந்த பணத்தை யாராவது தவறவிட்டார்களா அல்லது திருடிய பணமா என்று போலீஸ் விசாரணை செய்து வருகிறது. அந்த பணம் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version