ஆன்லைன் கல்விக்குஅக்.,12 முதல் மூன்று வாரங்களுக்கு விடுமுறை – அரசு உத்தரவு

ஆன்லைன் கல்விக்கு அக்.,12 முதல் மூன்று வாரங்களுக்கு விடுமுறை என கர்நாடக அரசு உத்தரவு.

கொரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமடைந்துள்ளது.  இதனால் 5 ஆவது கட்டத் தளர்வுகளின்போது அரசு பள்ளிகள் திறக்க மாநில அரசுகளின் முடிவு என்று அறிவித்துள்ளது.

இந்நிலையில் மாநில அரசுகள் அந்தந்த மாநில நிலவரத்திற்கு ஏற்ப பள்ளிகள் துவங்க முடிவு எடுத்து வருகின்றனர். எனவே பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகள் ஆன்லைன் வாயிலாகவே கற்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக மாநில கல்வித்துறை வரும் அக்டோபர் 12முதல் 3 வாஅர காலத்திற்கு ஆன்லைன் படிப்பிற்கு விடுமுறை அளித்துள்ளது.

அதாவது கர்நாடக பள்ளி கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் இடைக்கால விடுமுறைகளை ( தசரா விடுமுறைகள்) ரத்து செய்வதாக அறிவித்த 10 நாட்களுக்கு பின் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து மாநில முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளதாவது: கொரொனா தொற்று காரணமாக வகுப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தி பல ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிகப்பட்டுள்ளனர். எனவே வரும் அக்டோப ர் 12முதல் 30 வரை விடுமுறை விடப்படுவதாகவும் தெரிவித்துளார்.

இந்த விடுமுறை விடுவதால் முதல்வர் ஆசிரியர்கள் மற்று குழந்தைகளுக்கு முன்கூட்டியே தசரா வாழ்த்துகளையும் கூறியுள்ளார்.

Exit mobile version