
ஆன்லைன் வழியாக கல்வி வழங்கிய முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அன் அகாடமி 1000 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமகால தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்வி வழங்கும் நிறுவனங்களில் முன்னணியில் இருப்பது அன் அகாடமி. இதை எஜுடெக் என்று டெக் உலகம் குறிப்பிடுகிறது. இதில் முதன்மையாக இருப்பது பைஜூஸ். இதில் பாலிவுட் நடிகர்கள் ஷாரூக்கான் உட்பட பலரும் முதலீடு செய்துள்ளனர்.
வருங்காலத்தில் இந்த துறைக்கும் பெரும் வளர்ச்சி இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் அன் அகாடமி 1000 பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம், கடந்தாண்டு ஆகஸ்டு மாதத்தில் 44 கோடி டாலர் அளவுக்கு நிதி திரட்டியது. அது நடந்து இன்னும் ஓராண்டு கூட ஆகாத நிலையில் 1000 ஊழியர்களை அன் அகாடமி பணி நீக்கம் செய்துள்ளதும் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
