சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜையன்று 5,000 பக்தர்கள் மட்டுமே அனுமதி : திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவிப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜையன்று 5,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்க படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சபரிமலை :

கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி ,சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 23ம் தேதி முதல் சாமி தரிசனம் செய்ய தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30 ம் தேதி நடைதிறக்கப்பட்டு, 31 ம் தேதி முதல் அதற்கான சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.

Read more – ஹரியானாவில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு : 40 வது நாளாக தொடர்கிறது டெல்லி விவசாய போராட்டம்

இந்தநிலையில், சிகர நிகழ்ச்சியான மகர விளக்கு பூஜை வருகிற 14 ம் தேதி நடைபெற இருப்பதால் சபரிமலை கோவிலில் கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.இதையடுத்து திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் என்.வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

மகர விளக்கு தினமான வருகிற14 ம் தேதி ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்த 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முன் பதிவு செய்யாத ஐயப்ப பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்தார்.மேலும், தரிசனத்திற்கு முன்பாக 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் என்ற கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்களை பக்தர்கள் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version