இந்தியாவிலேயே உற்பத்தியாகும் ஆக்ஸ்போர்டின் கொரோனா மருந்து- ஒப்பந்தம் நிறைவு

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்திருக்கும் கொரோனா மருந்தை இந்தியாவில் தயாரிக்க இந்திய நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ளது. இதனால் கூடிய விரைவில் இந்த மருந்து இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய நிறுவனமான செரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம், ஆக்சிபோர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

தற்போது, இந்தியாவில் இந்த மருந்தை தயாரிக்க அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறது செரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம். அனுமதி கிடைத்தவுடன் சோதனை செய்யப்படவுள்ள இந்த மருந்து, கூடிய விரைவில் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

Exit mobile version