திருவனந்தபுரம் மலபார் எக்ஸ்பிரஸ் தீப்பிடித்து எரிந்தது : பாதுகாப்பு செயின் இழுத்து தப்பித்த பயணிகள்

திருவனந்தபுரம் மலபார் சரக்கு எக்ஸ்பிரஸ் தீப்பிடித்து எரிந்ததால் பயணிகளிடையே அதிர்ச்சி ஏற்பட்டது.

திருவனந்தபுரம்:

மங்களூருவிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த மலபார் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 7.45 மணி அளவில் திருவனந்தபுரத்தை நெருங்கியபோது, ரயிலின் பார்சல் பெட்டியில் தீப்பிடிக்க ஆரம்பித்தது. அப்பொழுது புகை வெளியேறுவதை பயணிகள் சிலர் கவனித்து உடனடியாக செயினை பிடித்து இழுத்து வர்கலா அருகே ரெயில் நின்றது.

Read more – காதலியை கொன்று வீட்டில் சுவற்றில் மறைத்து பூசிய காதலன் : 3 மாதங்களுக்கு பிறகு உடல் மீட்பு

தீ விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், தகவல் அறிந்த ரெயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து பயணிகளும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். மேலும், தீ பிடித்து எரிந்த அந்த சரக்கு பெட்டியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

2 மோட்டார் வாகனம் எரிந்து கருகிய நிலையிலும் சில பொருட்களும் சேதமடைந்துள்ளனர். இந்த தீவிபத்து குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version