ஆந்திராவில் மின் கட்டணம் செலுத்தாதவர்களின் வீடுகளில் இணைப்பினை துண்டிக்க வந்த அதிகாரிகளை மக்கள் கட்டி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள முஸ்லாம்பூர் கிராமத்தில் , மின் கட்டணம் அதிகமாக வசூலிப்பதாகவும், சரியாக மின் விநியோகம் கிராமத்திற்கு வழங்கப்படுவதில்லை என புகார் தெரிவித்துவந்தனர். இந்த நிலையில் மின்கட்டணத்தினை செலுத்தாத வீடுகளில் இணைப்பினை துண்டிக்க அதிகாரிகள் கிராமத்திற்கு வந்துள்ளனர். அப்போது மக்களிடம் சிக்கிக்கொண்ட மின்வாரிய துறை அதிகாரிகளை கிராம மக்கள் கயிற்றில் கட்டி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.