சிங்கம் படத்துல வர்ற மாதிரி..ஏது கிரண் பேடியா?..மோடியின் கலந்துரையாடல்

சிங்கம் படத்தை போன்று பணியில் சேரும்பொழுதே தங்களைப் பார்த்து ஏரியா ரவுடிகள் அனைவரும் பயப்பட வேண்டும் என, போலீசார் நினைக்கின்றனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஐதராபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகாடமியில், இளம் ஐ.பி.எஸ். பயிற்சி அதிகாரிகளிடம் வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி இன்று உரையாடினார்.

அப்போது, உங்களது காக்கி சீருடையின் அதிகாரத்தினை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு முன்னதாக அதனை அணிந்து கொள்வதில் நீங்கள் பெருமை கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியம். உங்களுடைய காக்கி சீருடைக்கான மரியாதையை ஒருபோதும் இழக்காதீர்கள் என கூறினார்.

போலீஸ் அதிகாரிகள் பணியில் சேரும்பொழுது, ஒவ்வொருவரும் நம்மை கண்டு பயப்பட வேண்டும்.  குறிப்பிடும்படியாக நமது ஏரியா ரவுடிகள் அனைவரும் பயப்பட வேண்டும் என நினைக்கின்றனர் என்று கூறினார்.

நடிகர் சூர்யா நடிப்பில் சிங்கம் படம் வெளிவந்து பின்னர் இந்தியிலும் அதேபெயரில் படமெடுக்கப்பட்டது.  இந்தியில் நடிகர் அஜய் தேவ்கன் நாயகனாக நடித்துள்ளார். இதனை சுட்டி காட்டி பிரதமர் மோடி பேசும்பொழுது, சிங்கம் போன்ற படங்களை பார்த்து விட்டு, தங்களை பற்றி அவர்கள் பெரிய அளவில் நினைத்து கொள்கின்றனர் என்றார்.

அதனால் உண்மையான பணி புறக்கணிக்கப்படுகிறது.  இதனை நீங்கள் தவிர்க்க வேண்டும்.  நமது பணி புறக்கணிக்கப்படவில்லை என்பதனை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என கூறினார்.

கொரோனா பாதிப்பு போன்ற காலத்தில் நல்ல முறையில் பணியாற்றி, காக்கி சீருடையில் இருந்த போலீசாரின் முகம் பொதுமக்களின் மனதில் நன்றாக பதிந்துள்ளது என்றும் அவர்களை பாராட்டி பேசினார்.

இதனிடையே, தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி கிரண் ஸ்ருதியிடம், இன்ஜினியரிங் படித்து விட்டு காவல் அதிகாரியாக மாற ஏன் முடிவு செய்தீர்கள்? என பிரதமர் கேள்விய எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த கிரண் ஸ்ருதி, ‛சீருடை அணிந்து மக்களுக்கு சேவையாற்ற பெற்றோர் விரும்பியதால் காவல்துறையை தேர்ந்தெடுத்தேன். கிரண்பேடி போலவே வரவேண்டும் என்பதற்காக தனக்கு கிரண் ஸ்ருதி என பெற்றோர் பெயர் வைத்தனர் என்றார்.

Exit mobile version