ஒடிசாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: பெற்ற மகளை கூலிப்படை வைத்து கொலை செய்த தாய்

ஒடிசாவில் கூலிப்படை வைத்து மகளை கொலை செய்த வழக்கில் தாயை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஒடிசா:

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் வசித்து வருபவர் சுகுரி கிரி( 58). இவரது மகள் ஷிபானி நாயக் (வயது 36). கடந்த 12 ம் தேதி நாக்ராம் கிராமத்தில் பாலம் ஒன்றின் கீழ் இருந்து ஷிபானியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஷிபானியின் உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனை மேற்கொண்டதில் அவரை கற்களால் அடித்தும், ஆயுதங்களால் தாக்கியும் கொலை செய்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கை தீவிர விசாரணை மேற்கொண்ட போது காவல்துறையினருக்கு ஒரு திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. அதில் தனது மகள் ஷிபானியை சுகுரி கிரி கூலிப்படை வைத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. 36 வயதான ஷிபானி நாயக் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்துள்ளார். இது தாய் சுகுரி கிரிக்கு தெரிந்து இந்த தொழிலை விட்டுவிடும் படி கேட்டுக்கொண்டார்.

Read more – 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களிடம் சீருடை, பழைய பாஸ் இருந்தால் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

ஆனால் தொடர்ந்து ஷிபானி நாயக் இந்த தொழிலில் ஈடுபடவே சுகுரி கிரி பிரமோத் ஜெனா ( 32) என்பவரை தொடர்பு கொண்டு ஷிபானியை கொலை செய்ய கூலியாக 50 ஆயிரம் பேசி அட்வான்சாக கிரி ரூ.8 ஆயிரம் கொடுத்துள்ளார். கொலை செய்தவுடன் மீதம் உள்ள 42 ஆயிரம் தருவதாக முடிவாகியுள்ளது. தற்போது சுகுரி கிரி மற்றும் ஜெனா அவரது கூட்டாளி 2 பேரையும் கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஒடிசாவில் தனது மகளை தாய் கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version