மும்பையில் மனஅழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்ற இளைஞரை பேஸ்புக் நிறுவனம் அளித்த தகவலால் காவல் துறையினர் மீட்டு காப்பாற்றியுள்ளனர்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசிக்கும் 23 வயது சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த சில தினங்களாக மன அழுத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. மனம் உடைந்த அந்த இளைஞர் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்து கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும், அவர் உயிரை மாய்த்துக்கொள்ளும் அந்த கொடூர காட்சியை பேஸ்புக்கில் லைவ்வாக பதிவு செய்துள்ளார்.
அந்த லைவ் பதிவு தான் என்னவோ இவரை அதிர்ஷ்டவசமாக காப்பாற்றியுள்ளது. அயர்லாந்தில் உள்ள பேஸ்புக் தலைமை நிறுவனம் அந்த இளைஞர் தற்கொலை தொடர்பான தகவலை உடனடியாக மும்பை சைபர் பிரிவு காவல்துறைக்கு அனுப்பியது. இதையடுத்து, சைபர் பிரிவு காவல்துறையினர் உடனடியாக பே மும்பை மாநகர காவல்துறையினர் உடனடியாக தெரிவித்தனர்.விரைவாக விரைந்த காவல்துறையினர் அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.
Read more – விரைவில் பறக்க தொடங்குவேன் : கங்குலி ஓபன்டாக் !
பேஸ்புக் நிறுவனம் மற்றும் மும்பை மாநகர காவல் துறையினர் எடுத்த இந்த துரித நடவடிக்கையால் அந்த இளைஞன் தற்போது உயிர்தப்பியுள்ளார். மேலும், அந்த இளைஞருக்கு சிகிச்சைக்கு பிறகு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.