பெருவெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்..டிராக்டர் கொண்டு கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றிய போலீசார்

தெலங்கானவில் மழை வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கிய நிலையில் கர்ப்பிணியை டிராக்டரில் ஏற்றி சென்று மருத்துவமனையில் அனுமதித்து போலீசார் காப்பற்றியுள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில்  வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளப்பெருக்கால் பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

மஞ்சேரியல் மாவட்டம் சென்னூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள குளம் நிரம்பி, ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தரைப்பாலம் முழுவதும் நீரில் முழ்கியதால் அவழியான போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, ப்பகுதி மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பிரசவத்திற்காக சென்னூர் நகர்ப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால், தரைப்பாலம் முழுவதும் மூழ்கியதால் குடும்பத்தினரால் அப்பெண்ணை மருத்துவமனைக் அழைத்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார், கர்ப்பிணி பெண்ணை டிராக்டரில் ஏற்றி தண்ணீர் சூழ்ந்த தரைப்பாலம் வழியாக பத்திரமாக அக்கரைக்கு அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். துரிதமாக செயல்பட்டு இரு உயிர்களை காப்பாற்றிய போலீசாரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Exit mobile version