புலம் பெயர் தொழிலாளர் குழந்தைகளின் கல்வியை பாதியில் நிறுத்த தடுப்பு நடவடிக்கை : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனா சூழ்நிலை காரணமாக புலம்பெயர் தொழிலாளர் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதை தடுக்க மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

புதுடெல்லி :

கொரோனா சூழ்நிலை காரணமாக புலம்பெயர் தொழிலாளர் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு வழிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி,

கொரோனா தொற்றின் ஊரடங்கின் காரணமாக பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிய வீடு வீடாக சென்று கணக்கெடுக்க வேண்டும். 6 வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளி செல்லாத குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விரிவான வியூகம் அமைக்க வேண்டும்.

Read more – இன்றைய ராசிபலன் 11.01.2021!!!

பள்ளி குழந்தைகளிடம் கல்விக்கான ஆர்வம் அதிகரிக்க சீருடை, பாடப்புத்தகங்கள் மற்றும் மதிய உணவு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும், தேர்வு தோல்வி( பெயில் ) என்ற முறையும் தளர்க்க வேண்டும். கல்வி கற்றல் இழப்பை தடுக்க ஆன்லைன் கல்வி, டிவி மற்றும் வானொலி மூலம் கற்கவும், நடமாடும் வகுப்பறைகளை நடத்த வேண்டும்.

நீண்ட நாட்களுக்கு பிறகு வகுப்பறை சூழ்நிலை ஏற்று மாணவர்கள் படிப்பதற்கும், எழுதுவதற்கும் தயார்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version