தடுப்பூசியை போட்டுக்கொண்ட மோடி.. கொரோனா இல்லா இந்தியாவை தேடி…

பிரதமர் மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

புதுடெல்லி :

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி பணி கடந்த ஜனவரி 16 ம் தேதி தொடங்கி போடப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் வழங்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, பிரதமர் மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

Read more – அதிமுக – பாஜக கூட்டணியில் ஒருமிதம் : அமித்ஷா பிரச்சாரத்தில் பெருமிதம்

அதன்பிறகு, தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்வர வேண்டும் என்றும், அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா இல்லா நாட்டை உருவாக்குவோம் என்று தெரிவித்தார்.

Exit mobile version