நடிகர் ரஜினிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து..

நடிகர் ரஜினிகாந்தின் 70 வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

நடிகர் ரஜினிகாந்தின் 70 வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உலகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடிவருகின்றனர்.பல முன்னணி பிரபலங்கள்,திரையுலகினர்,அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில்,அன்பான ரஜினிகாந்திற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.நீங்கள் நீண்ட ஆரோக்கியமான வாழ்வை ரஜினிகாந்த் பெற வேண்டும் என்று வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Exit mobile version