வேளாண் அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தை விவசாயிகள் படிக்க வேண்டும் – பிரதமர் மோடி டுவீட்

வேளாண் அமைச்சர் தனது உணர்வுகளை விவசாயிகள் படிக்க வேண்டுமென  பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

புதுடெல்லி:

டெல்லி மற்றும் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் இன்று 24-வது நாளை எட்டியுள்ளது. அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களிலும் விவசாய சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையில், வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என தொடர்ந்து மத்திய அரசு தெரிவித்து வருகிறது. குறிப்பாக வேளாண் சட்டங்களால் குறைந்த பட்ச ஆதார விலைக்கு எந்த பாதிப்பு இல்லை என வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். பிரதமர் மோடியும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவான கருத்துக்களையே தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார். தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளில் கருத்துக்களை தொடர்ந்து டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்.

Read more – தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்ட ம் : பாஜக தலைவர் பிரேந்தர் சிங் ஆதரவு

இந்நிலையில், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று தமிழில் வெளியிட்டுள்ள பதிவில்,
 
வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தனது உணர்வுகளை வேளாண் சகோதர சகோதரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உழவர் பெருமக்கள் அதைப் படிக்க வேண்டுகிறேன.

Exit mobile version