கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசியல்வாதிகள் முந்தக்கூடாது : பிரதமர் மோடி

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசியல்வாதிகள் முந்தக்கூடாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டெல்லி :

இந்தியாவில் ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்சின்’ ஆகிய 2 மருந்துகளை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து சீரம் நிறுவனம் இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசிகளை தயாரித்துள்ளது.சீரம் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடி கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. சீரம் நிறுவனத்திடம் இருந்து கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்தை,  ஒரு டோஸ் 200 ரூபாய் என்ற விலையில் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

வருகிற 16-ந் தேதி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்படுகிறது.  நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து இன்று பிரதமர் மோடி, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன்  ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது :

கொரோனா நெருக்கடியில் ஒற்றுமையாக  நாம் ஒன்றாக இணைந்து பணியாற்றினோம் என்பதில் திருப்தி அடைகிறேன். முதல் கட்டமாக சுமார் 3 கோடி சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்னணி தொழிலாளர்களுக்கு  தடுப்பூசி போடப்படும். சுகாதார ஊழியர்கள் ,  துப்புரவுத் தொழிலாளர்கள், பிற முன்னணி தொழிலாளர்கள், பாதுகாப்புப் படைகள், காவல்துறை மற்றும் பிற துணை ராணுவப் படையினருக்கும் முதல் கட்டத்தில் தடுப்பூசி போடப்படும்.  கொரோனா தடுப்பூசிக்கு அரசியல்வாதிகள் முந்தக்கூடாது தங்களுக்கான முறை வரும்போது அரசியல்வாதிகள் தடுப்புசி போட்டுக்கொள்ள வேண்டும் என கூறினார்.

Exit mobile version