கொரோனா தொற்று காலத்தில் இந்திய சுகாதாரத்துறை மீதுள்ள மரியாதை உயர்ந்த நிலையில் உலகம் முழுவதும் இந்திய மருத்துவர்களின் தேவை அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி :
மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்துறை தொடர்பான அறிவிப்புகளை அமல்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் பேசினார். அப்பொழுது பேசிய அவர், மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீடு தனித்துவமானது. சுகாதாரத்துறை மீது மத்திய அரசு கொண்டுள்ள அக்கறையை இது காட்டுகிறது.
இந்தியாவை ஆரோக்கியமாக வைத்திருக்க மத்திய அரசு ஒரே நேரத்தில் 4 முனைகளில் பணியாற்றி வருகிறது. நோயை தடுத்தல், ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்கச் செய்தல், சுகாதார உள்கட்டமைப்புகள் மற்றும் பணியாளர்களின் தரம் போன்றவை அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.
Read more – மு.க. ஸ்டாலின் அரியணை ஏறும் வரை, நாங்கள் படியேற மாட்டோம்.. திமுக உறுப்பினர்களின் உறுதி உரை
அதனைத்தொடர்ந்து பேசிய அவர்,இந்திய சுகாதாரத்துறையின் வலிமையை உலகம் கவனித்துள்ளது. எதிர்காலத்தில், இந்திய டாக்டர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களுக்கான கிராக்கி, உலகம் முழுவதும் அதிகரிக்கும்.அதே சமயத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு கிராக்கி அதிகரிப்பதை எதிர்கொள்ள இந்தியா தன்னை தயார்படுத்தி வருகிறது என்றும், 2025 ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க இந்தியா உறுதி எடுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.