அடுத்த தவணைக்கான உதவித் தொகையை விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார் : பிரதமர் மோடி

அடுத்த தவணைக்கான உதவித் தொகையை விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்வை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

டெல்லி :

பிரதம அமைச்சர் கிசான் சம்மான் நிதி (பி.எம்.-கிசான்) திட்டத்தின்கீழ், சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அடுத்த தவணை நிதியுதவி வழங்குவதை பிரதமர் மோடி இன்று(வெள்ளிக்கிழமை) காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். 

மேலும் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம், 9 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி, பரிமாற்றம் செய்யப்படும்.

Read more – ரத்த அழுத்தப் பிரச்சினை: மருத்துவமனையில் ரஜினிகாந்த்

இந்த நிகழ்வின்போது, 6 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் மோடி கலந்துரையாடுகிறார். பி.எம்.கிசான் திட்டம் மற்றும் விவசாயிகள் நலனுக்காக அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு புதிய முயற்சிகள் தொடர்பான தங்கள் அனுபவங்களை விவசாயிகள் பகிர்ந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version