நமது நாட்டின் கண்டுபிடிப்புகள் உலகளவில் சென்றடையும் : மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு

நமது நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலக அளவில் சென்றடையவேண்டும் என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி :

மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலி மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.அதேபோல், இன்று உரையாற்றிய பிரதமர் மோடி பேசியதாவது :

2020 ம் ஆண்டு பல இடர்கள் நமக்கு புதிய வாய்ப்புகளை அமைத்து உள்ளது. கொரோனா பரவல் காரணமாக பல முன்னணி நாடுகள் கூட வணிகத்தில் வீழ்ந்தது. இருப்பினும், தன்னிறைவு இந்தியா ஒவ்வொரு நெருக்கடியிலும் புதிய ஒன்றை கற்று சுயசார்பு முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

Read more – கிழக்கு கடற்கரை சாலை : 31 ம் தேதி இரவு 10 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை

நமது நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலக அளவில் சென்றடையவேண்டும். நாமும் உள்ளூர் தயாரிக்கும் பொருட்களின் தரத்தில் எந்த சமரசமும் செய்யக்கூடாது. நம் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க உறுதி ஏற்போம் என்றார்.

அதனை தொடர்ந்து, நாட்டில் உள்ள சிறுத்தைகளின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 60 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் சிங்கங்கள், புலிகளின் எண்ணிக்கையும் வனப்பகுதியில் அதிகரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version