விவசாயிகளுக்கான 100-வது கிசான் ரயிலை தொடங்கி வைத்தார் : பிரதமர் மோடி

விவசாயிகளுக்கான 100-வது கிசான் ரயிலை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

டெல்லி,

விவசாயிகளின் வருமானத்தை 2022ம் ஆண்டிற்குள் இரண்டு மடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும், விவசாயிகளின் விளைபொருட்கள் விரைவாக சந்தைகளை சென்றடையும் வகையிலும் கிசான் இரயில்கள் இயக்கப்படுகின்றன. 

முதல் கிசான் இரயில் கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி அறிமுகம் செய்து இந்த ரெயில் மகாராஷ்டிர மாநிலம் தேவ்லாலியில் இருந்து  பீகாரின் தானாபூர் வரை இயக்கப்பட்ட பின்னர் முசாபர்பூர் வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு விவசாயிகளின் வரவேற்பைப் பொருத்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் கிசான் இரயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில்,  விவசாயிகளுக்கான 100-வது கிசான் ரயிலை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

Read more – விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை இல்லை : மத்திய அரசு தேதி ஒத்திவைப்பு

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது :

நாடு முழுவதும் உள்ள கோடிகணக்கான விவசாயிகளுக்கு எனது வாழ்த்துக்கள். கொரோனா பெருந்தொற்று சவால் இருந்தபோதிலும், கிசான் ரெயில் சேவை கடந்த நான்கு மாதங்களில் விரிவடைந்து அதன் 100 வது ரயிலை இப்போது பெற்றுள்ளது. கிசான் ரயில் சேவை விவசாயிகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் ஒரு பெரிய படியாகும். என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Exit mobile version