புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி..

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

புதுடெல்லி:

தற்போது இயங்கிவரும் நாடாளுமன்ற கட்டிடமானது 100 ஆண்டுகளை கடந்து சிறப்பாக காட்சியளிக்கிறது.ஆனால் இங்கு போதிய இடவசதி இல்லை.எனவே புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டு அதற்காக தற்போதைய பழைய கட்டிடத்திற்கு அருகிலேயே புதிய கட்டிடம் எழுப்பவும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,உச்ச நீதிமன்றம் நாடாளுமன்ற கட்டிட வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ள நிலையில் அதற்கான பணியை தொடங்க கூடாது என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.மேலும் பூமி பூஜை நடத்துவதற்கு மட்டும் ,உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது.

அதனைத்தொடர்ந்து,புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இன்று (வியாழக்கிழமை) பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டி, பூமி பூஜையையும் நடத்தி வைக்கிறார்.இந்த புதிய கட்டிடமானது ரூ.971 கோடி செலவில் 2022 ம் ஆண்டுக்குள் கட்டுமான பணி நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது.அதே ஆண்டு 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version