இந்திய ரூபாய் நோட்டுகளில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவப்படம் அச்சடிக்க கோரிய வழக்கை மத்திய அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை :
இந்திய ரூபாய் நோட்டுகளில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவப்படம் அச்சடிக்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதில் இந்தியா ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த போது, சுதந்திர போராட்டத்திற்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது இளம் படை தங்களது உயிரையும் பொருட்படுத்தாது போரிட்டு உயிர் தியாகம் செய்தனர்.
எனவே, இந்திய ரூபாய் நோட்டுகளில் நேதாஜியை கௌரவிக்கும் வகையிலும், அவரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் உருவப்படத்தை அச்சடிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
Read more – படவாய்ப்புக்காக மூக்கை அறுத்த மூத்த நடிகை : விபரீதத்தில் முடிந்த வாழ்க்கை
இந்த மனுவை விசாரித்த எம்.எம் சுந்தரேஷ், மற்றும் எஸ்.ஆனந்தி என்ற நீதிபதிகள் இந்திய ரூபாய் நோட்டுகளில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவப்படம் அச்சடிக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.