சசிகலா விடுதலையில் சிக்கலா? சிறையில் சொகுசு வாழ்க்கையை அனுபவித்தாரா என சிறப்பு குழு அறிக்கை வேண்டும் என முதலமைச்சருக்கு கடிதம்!

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவருகிறார் என்ற புகார் குறித்து அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை குழு அறிக்கை வழங்கும் வரை சசிகலாவை விடுதலை செய்யக்கூாது என முதல்வர் எடியூரப்பாவுக்கு காங்கிரஸ் பிரமுகர் கடிதம் எழுதியுள்ளார்.
சசிகலா விடுதலையில் சிக்கலா? சிறையில் சொகுசு வாழ்க்கையை அனுபவித்தாரா என சிறப்பு குழு அறிக்கை வேண்டும் என முதலமைச்சருக்கு கடிதம்!

சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா சிறைக்குள்ளேயே சொகுசு வசதி பெற பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தாக புகார் எழுந்ததையடுத்து, இதுக்குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இந்த குழு எந்த அறிக்கையினையும் கர்நாடக அரசிற்கு வழங்காத நிலையில், இன்றும் சில நாட்களுக்குள் சசிகலா சிறையில் விட்டு வெளியில் வருகிறார் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் தான் இதுக்குறித்து முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு மாநில செயலாளர் ஏ.முத்துமாணிக்கம் கடிதம் எழுதியுள்ளார். அதில் சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி ஆகியோர் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி சிறை விதிமுறைகள் மீறி சலுகை அனுபவித்து வருவதாக, சிறை துறை அதிகாரியாக இருந்த டி.ரூபாவிடம் சிறை கைதிகள் 30க்கும் மேற்பட்டவர்கள் புகார் கொடுத்தனர்.

அதை தொடர்ந்து சிறையில் சோதனை நடத்தியபோது, விதிமுறைகள் மீறி சலுகைகள் வழங்கியுள்ளதாகவும் அதற்காக பணம் கை மாறியுள்ளதாக மேலதிகாரிகளிடம் டி.ரூபா அறிக்கை கொடுத்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் மீடியாக்கள் முன் பகிரங்கப்படுத்தினார்.

அதை தொடர்ந்து சசிகலாவுக்கு சலுகை வழங்கியது தொடர்பான புகாரை விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு விசாரணை நடத்தி கொடுத்த அறிக்கையில் சிறையில் சலுகைகள் வழங்கியது உண்மை என்று தெரிவித்திருந்தது. இருப்பினும் புகார் தொடர்பான நடவடிக்கைகள் துரிதமாக இல்லாத நிலையில் மாநில அரசு சிறப்பு விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அக்குழு இன்னும் ஆய்வு அறிக்கை வழங்காத நிலையில், நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை விடுதலை செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.ஐ.டி. ஆய்வு அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கும் வரை சசிகலா உள்பட வழக்கில் தொடர்புடையவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கூடாது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் தான் சசிகலா இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் சிறையில் இருந்து வெளியே வந்துவிடுவார் என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், முதலமைச்சருக்கு எழுதியுள்ள இக்கடித்தின் மூலம் சசிகலா விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.

Exit mobile version