இந்தியாவில் பப்ஜி விளையாட்டிற்கு இன்று முதல் முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. அனைத்து சேவைகளும் நிறுத்தப்படுகிறது என்று பப்ஜி மொபைல் அப் கேம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் முதல், பப்ஜி உள்ளிட்ட 117 செயலிகளுக்கு தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தடை விதித்து உத்தரவிட்டது. இந்திய சீன எல்லையில் நிலவி வந்த அசாதாரணமான சூழ்நிலைக்குப் பிறகு, இந்த முடிவு வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஏற்கனவே பப்ஜி கேமை பதிவிறக்கம் செய்து வைத்தவர்கள், அதனை தொடர்ந்து உபயோகித்து வந்தனர். மேலும், பப்ஜி கேமுக்கு அடிமையானவர்கள் சிலர் தற்கொலை செய்து வந்த நிலைமையும் உருவானது. கடந்த 26-ஆம் தேதி, சத்தியமங்கலம் அருகே பப்ஜி கேமுக்கு அடிமையான 16 வயது சிறுவன் அருண், மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்றுமுதல் இந்தியாவில் உள்ள பயனாளிகளுக்கான அனைத்து சேவைகளும் நிறுத்தப்படுவதாக பப்ஜி மொபைல் அப் கேம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை பேஸ்புக் மூலம் பப்ஜி மொபைல் அப் கேம் நிறுவனம்அறிவித்துள்ளது.