தமிழகத்தைப்போன்று புதுச்சேரியிலும் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீடிப்பு

கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக தமிழகத்தைப்போன்று புதுச்சேரியிலும் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில முதல்வர் நாரயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக தமிழகத்தைப்போன்று புதுச்சேரியிலும் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில முதல்வர் நாரயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும்  அன்லாக் 3 என தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் மத்திய அரசின் அறிவிப்பின் படி அமல்படுத்தப்படுகிறது. ஆனாலும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸின் வேகத்தினை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் அந்தந்த மாநில அரசுகள் தவித்துவருகிறது. எனவே இந்த சூழலில் மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய  ஊரடங்கினை மாநில அரசுகள் அமல்படுத்தமுடியாத சூழலில் உள்ளன. ஏற்கனவே தமிழ்நாடு,  மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் ஊரடங்கினை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்துள்ளதை போன்று தற்போது புதுச்சேரி அரசும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கினை நீடித்து அம்மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி புதுச்சேரி மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை மதநிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்கனபே பிறப்பித்த தடை உத்தரவு தொடரும். மேலும்.  இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளே மற்ற மாவட்டம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வேலை நிமிர்த்தமாகவோ அல்லது சொந்த தேவைகளுக்காகவோ  வர வேண்டும்  அல்லது வெளியே செல்ல வேண்டும் என்றாலும் இ-பாஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனவும் உத்தரவ பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதோடு மாஹேவில் இருப்பவர்கள் கேரளா அரசு அறிவித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அதேபோன்று ஏனாம் பகுதியிலிருப்பவர்கள் ஆந்திர அரசின் விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக் கிழமைகளில் புதுச்சேரியில் ஊரடங்கு இல்லை எனவும் மாநில அரசு அறிவித்துள்ளது.

Exit mobile version