வருமானம் வருகிறது என்றால் என்னைப் பற்றி மீம்ஸ் போடுங்கள் – தெலங்கானா கவர்னர்

எனக்கு அவமானம், உங்களுக்கு வருமானம் என்றால் தாராளமாக மீம்ஸ் போடுங்கள் என்று தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

தற்போது தெலங்கானா கவர்னராகவுள்ள தமிழிசை சவுந்தரராஜன் முன்னாள் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவராக இருந்தார். அப்போது அவரது கட்சியையும், உருவத்தையும் வைத்து ஏராளமானவர்கள் கிண்டலடித்து மீம்ஸ் போடுவது வழக்கம். என்றாலும் பெரும்பாலானாவர்களுக்கு தமிழிசையை பிடிக்கவே செய்யும். மீம்ஸ் போடுபவர்கள் மீது அவர் ஒருநாளும் கோப்பட்டதும் இல்லை. பின்னர் தெலங்கானா கவர்னர் ஆனபிறகு மீம்ஸ் கிரியேட்டர்களின் கவனம் தமிழிசையிடம் இருந்து விலகியது என்றே சொல்லலாம். இந்தநிலையில்  அவர், தெலங்கானா கவர்னராக பொறுப்பேற்று ஒரு ஆண்டுகள் ஆனதையொட்டி, ‘ என் ஓராண்டு பயணம் ‘ என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார்.

சென்னையில் அந்த புத்தகத்தை பல்வேறு நிறுவனங்களின் ஊடகவியாளர்கள் பத்திரிக்கையாளர்கள் செய்தி ஆசிரியர்கள் முன்னிலையில் வெளியிட்டு தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். அப்போது,  இள வயது கவர்னர் எப்படி தெலுங்கானாவை சமாளிக்க போகிறார்’ என்கிற கேள்வி எழுந்தது. நான் மகப்பேறு மருத்துவர் என்பதால், தான் புதிதாக பிறந்த தெலுங்கானாவை, குழந்தையை போல சிறப்பாக கையாளுவேன் ‘என்று பதில் கூறியதாக தமிழிசை குறிப்பிட்டார். மேலும், தன்னை பற்றி மீம்ஸ் போடுபவர்களை பற்றி பேசிய தமிழிசை,  ‘என்னை வைத்து, ‘மீம்ஸ்’ போட்டால், அதிக பார்வையாளர்கள் பார்க்கின்றனர்’ என்கின்றனர். அதற்கு, ‘எனக்கு அவமானம்; உங்களுக்கு வருமானம் என்றால், தாராளமாக மீம்ஸ் போடுங்கள்’ என்றேன். இதுதான் என் இயல்பு என்று தமிழிசை உருக்கத்துடன் குறிப்பிட்டார்.

Exit mobile version