டெல்லியில் தடையை மீறி விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்திய காங்கிரஸ் கட்சியினரை சார்ந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
புதுடெல்லி:
டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விவசாய போராட்டத்திற்கு ஆதரவாக பல எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சி நாடுமுழுவதும் விவசாயிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த 2 கோடி மக்களிடம் வேளாண் சட்டங்களை எதிராக கையெழுத்து பெற்றது.
Read more – ஐந்து திரைப்பட ஊடக பிரிவுகளை ஒன்றாக இணைக்க திட்டம் : மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்
பொதுமக்களிடம் பெற்ற இந்த கையெழுத்துடன், வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக மனு ஒன்றையும் அதனுடன் இணைத்து தொண்டர்களின் முன்னிலையில் ராகுல் காந்தி குடியரசு தலைவரிடம் மனு அளிக்க பேரணியாக சென்றார்.
இந்தநிலையில், கொரோனா காரணமாக 144 தடை இருந்த நிலையில் காங்கிரஸ் கட்சியினரின் பேரணியை காவல் துறையினர் தடுத்து நிறுத்திய போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனால், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களை போலீசார் கைது செய்து பேருந்தில் ஏற்றிச் சென்றனர்.இதையடுத்து அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காட்சி அளித்தது.