நாட்டில் இளைஞர்கள் வேலையின்மையால் தவித்து வருகின்றனர் : மோடியின் ஆட்சி குறித்து ராகுல் காந்தி பேச்சு

மோடியின் ஆட்சியில் இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி:

வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஒரு மாத காலமாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்பாகவும், பொதுமக்களின் பொருளாதார நிலை குறித்தும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டார்.

அதில், நாட்டில் வேலையின்மை காரணமாக படித்த இளைஞர்களும், பணவீக்கத்தின் துயரத்தால் பொதுமக்களும், புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளும், மோடியின் ஆட்சியின் கீழ் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

Read more – இன்றைய ராசிபலன் 30.12.2020!!!

இதேபோல், கடந்த நவம்பர் மாதம் ராகுல் காந்தி,மோடியின் தவறான கொள்கைகளால் இந்தியா வரலாற்றில் முதல் முறையாக பொருளாதார மந்த நிலைக்குள் சிக்கி தவிக்கிறது. பிரதமர் மோடியின் திட்டங்களே இந்தியாவின் பலத்தை வீழ்த்தி பலவீனத்தில் தள்ளியிருக்கிறது என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version