புதிய தேர்தல் ஆணையராக முன்னாள் நிதித்துறைச் செயலர் ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையராக பதவி வகித்து வரும் அசோக் லாவசா ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வரும் 31ம் தேதி தனது தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து விளக்குகிறார். இதற்கான ராஜினாமா கடிதத்தையும் அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார்.
அசோக் லவாசா பதவி விலகுவதை அடுத்து காலியாக உள்ள அப்பொறுப்புக்கு ராஜீவ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் கூடிய அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜீவ் குமார், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து நிதித்துறைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
குறிப்பாக, சிறுகுறு நிறுவனங்களுக்கு 59 நிமிடங்களில் கடனுதவி வழங்கும் திட்டம் போன்றவற்றை மத்திய அரசுக்கு வடிவமைத்து கொடுத்ததில் ராஜீவ் குமாரின் பங்கு முக்கியமானது ஆகும். இதையடுத்து, செப்டம்பர் 1ம் தேதி புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவி ஏற்க உள்ளார்