எதிர்க்கட்சி எம்பிக்கள் தன்னை அவமதித்ததைக் கண்டித்து மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

பாராளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்ட போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் துணைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதில் அவையின் விதிமுறைகளை மீறியவர்களை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.
எட்டு எம்.பி. களை சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து 8 எம்.பிக்களும் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்டனர். இது குறித்து அனைவரும் பரபரப்பாக பேசி வருகின்றனர். இவ்வாறு முற்றுகை இட்ட எட்டு எம்.பியையும் இன்று காலை துணை தலைவர் ஹரிவன்ஷ் சந்தித்தார். அவர்களுக்காக டீ கொண்டு வந்தார். ஆனால் அவர் அளித்த டீயை ஏற்க எம்.பி.க்கள் மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் தன்னை அவமதித்ததைக் கண்டித்து மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனை கண்டித்தும் இதனை ஆதரிக்கும் வகையில் வெங்கய்ய நாய்டும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்.