புதிய வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கத் தயார் என்று மத்திய அரசு கூறியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மத்திய அரசு அறிவித்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகரில் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுவரை விவசாயிகளுடன் 9 கட்ட பேச்சு வார்த்தை நடந்து அது தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற 10-வது கட்ட பேச்சுவார்த்தையின் போது ஒருவழியாக மத்திய அரசு இறங்கி வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது புதிய வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கத் தயார் என்று மத்திய அரசு கூறியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சட்டத்தில் உள்ள பாதகங்களை அறிய குழு ஒன்று அமைக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்காத விவசாயிகள் போராட்டத்தை தொடர்வோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். இதையடுத்து வெள்ளியன்று 11-வது கட்ட பேச்சு வார்த்தை நடக்க இருக்கிறது.