பெங்களூரு போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த விவேக் ஓபராய் யின் மைத்துனர் ஆதித்திய ஆல்வா சென்னையில் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் பெங்களூருவைச் சேர்ந்த நடிகர் நடிகைகள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்து வந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான ஆதித்ய ஆல்வா வை பல நாட்களாக தேடி வந்தனர். இவர் மறைந்த முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் ஆல்வா அவரது மகன் மற்றும் பிரபல நடிகரான விவேக் ஓபராய் அவரது மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போதை பொருட்களை பறிமுதல் செய்து அதை நட்சத்திர விடுதிகளில் கேளிக்கை கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்தி அங்கு நடிகர் நடிகைகளுக்கு இவர் சப்ளை செய்து வந்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றம்சாட்டினர். பலர் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக இவர் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் தனிப்பிரிவு சென்னையில் பதுங்கி இருந்த ஆதித்ய ஆல்வா வை கைது செய்தனர். இந்த கடத்தலில் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.