ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் சன்னதி இன்று திறப்பு; பக்தர்களுக்கான தடை நீடிப்பு தொடரும்!

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படவுள்ள நிலையில், பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு தொடரும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கோவில்

கேரள மாநிலத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாள் நடை திறக்கப்பட்டு தொடர்ந்து 5 நாட்களுக்கு தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படவுள்ளது.

தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி இன்று மாலை 5 மணிக்கு நடையை திறந்து வைத்தப்பின்னர் தொடர்ந்து வருகிற 21-ந் தேதி கோவிலில் ஆவணி மாத பூஜை நடைபெறவுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கும் வகையில், பக்தர்கள் தரிசனத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

Exit mobile version