கொரோனாவால் மூடப்பட்டிருந்த சபரிமலை இன்று திறக்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா வேகமாகப் பரவியதால் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் மக்களின் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
எனவே கேரளாவில் மலையாள மாதத்தில் துலாம் மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
இன்று துங்கும் நடை வரும் 21 ஆம் தேதி வரை திறந்திருக்கும் அதனால் பாதுகாப்பு விதிமுறைகளுடன் தினமும் 250 பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்., இதற்கான ரிசர்வேசன் வெர்ச்சூவல் கியூ மேனேஜ்மெண்ட் சிஸ்டம் மூலம் நடைபெற்று வருகிறது.
இதில் முக்கியமாக பக்தர்களுக்கு கொரொனா நெகட்சிவ் ரிசர்ல் வந்தால் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். அதேசமயம் மணிமலையாறு, பம்பை மீனச்சல்,குளங்களில் பக்தர்கள் இறங்கவோ குளிக்கவோ அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
