பாஜகவின் கொரோனா தடுப்பூசியை நான் எப்படி நம்புவது என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
லக்னோ :
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்தியாவிலும் தடுப்பூசி விநியோகிப்பதற்கான சோதனைப் பயிற்சி இன்று நாடு முழுவதும் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். டெல்லியில் தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னோட்டத்தை ஆய்வுசெய்த மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன், இந்தியா முழுவதும் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாகச் செலுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாஜகவின் கொரோனா தடுப்பூசியை நான் எப்படி நம்புவது என்று உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ் :
“ தயாராகிவரும் கொரோனா தடுப்பூசி பாஜகவின் தடுப்பூசியாகும். பாஜகவின் தடுப்பூசியை நான் எப்படி நம்புவது?. 2022 தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தில் எங்கள் அரசு அமையும்போது அனைவரும் இலவச தடுப்பூசியைப் பெறுவார்கள். எங்களால் பாஜகவின் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள முடியாது” என்று கூறினார்.
Read more – IDBI வங்கி வேலைவாய்ப்பு 2021
இதனைத்தொடர்ந்து அகிலேஷ் யாதவின் இந்த கருத்துக்கு கண்டனத்தை தெரிவித்துள்ள உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, “தடுப்பூசி குறித்து அகிலேஷ் எழுப்பிய கேள்விகள் நாட்டின் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. தடுப்பூசி குறித்து தவறாக பேசியதற்காக அகிலேஷ் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்