மிஸ் இந்தியா டீன் பட்டத்தை வென்ற சந்தியா

சென்னை கீழ்ப்பாக்கம் சிஎஸ்ஐ பெய்ன் பள்ளியை சேர்ந்த 15 வயதான சந்தியா மிஸ் இந்தியா டீன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

கடந்த 3ந் தேதி மும்பையில் நடந்த இந்த போட்டியில் வென்றதன் மூலம், அமெரிக்காவில் நடைபெற உள்ள சர்வதேச டீன் அழகி போட்டிக்கு சந்தியா தேர்வாகியுள்ளார்.

மிஸ் டீன் பட்டம் மட்டுமின்றி, சிறந்த உடல், மனம் மற்றும் ஆன்மா என்ற பட்டத்தையும், சிறந்த சுற்றுச்சூழலாளர் என்ற பட்டத்தையும் வென்றுள்ளார். “இந்த விருதுக்கு எனது பெற்றோர்கள் பாலாஜி – விதுலா நரேஷ் முயற்சியே காரணம்” என மிஸ் டீன் இந்தியா சந்தியா நெகிழ்ந்துள்ளார்.

தாய் விதுலா நரேஷ் உடன் சந்தியா
Exit mobile version