ஓடும் ரயிலில் மாரடைப்பு ஏற்பட்ட பெண்ணை கைகளில் தூக்கி மருத்துவனைக்கு ஓடிய காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
திருவனந்தபுரம் ;
கேரள மாநிலம் வடகரா பகுதியில் இருந்து திருச்சூர் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இதேபோல் சதாப்தி எக்ஸ்பிரஸ் இயங்கிக்கொண்டிருந்த போது அனிதா (54) என்ற பெண் பயணம் செய்தார்.
திருச்சூர் அருகே சதாப்தி எக்ஸ்பிரஸ் கடக்கும்போது திடீரென அந்த பெண்ணிற்கு மாரடைப்பு ஏற்பட்டது, சக பயணிகள் ரயில்வே அதிகாரிகளை தொடர்பு கொண்டு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். திருச்சூர் ரயில் நிலையில் ரயில் நின்றவுடன் துரிதமாக செயல்பட்ட ஓமணக்குட்டன் என்ற போலீசார் பாய்ந்து உடனடியாக அந்த பெண்ணை கைகளில் ஏந்தி ஓடினார்.
Read more – எவரெஸ்ட்டில் கொட்டப்படும் உயிர்காக்கும் பொருட்கள் : கலைப்பொருட்களாக மாற்ற மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முடிவு
திருச்சூர் ரெயில் நிலையத்தில் அந்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திருச்சூர் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள் ரயில் பயணத்தில் அந்த பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வீல் சேர், ஸ்ட்ரெச்சர் என்று எதையும் எதிர்பார்க்காமல் அந்த பெண்ணை ஓமணக்குட்டன் கைகளில் ஏந்தி ஓடி உயிரை காப்பாற்றியதால் காவல்துறை அதிகாரிகளும், மருத்துவர்களும் பாராட்டி வருகின்றனர். மேலும், ஓமணக்குட்டன் கைகளில் தூக்கி ஓடிய காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.